விருதுநகர் மாவட்டத்தில் 4,652 பேருக்கு கொரோனா தடுப்பூசி


விருதுநகர் மாவட்டத்தில் 4,652 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 10 Feb 2021 2:13 AM IST (Updated: 10 Feb 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 4,652 பேருக்கு கொரோனா தடுப்பூசி

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் பேருக்கு  முதல் கட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று வரை மாவட்டம் முழுவதும் 4,652 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த வேகம் இல்லாத நிலையில் தடுப்பூசி போட தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,602 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 4 லட்சத்து 2,891 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,594 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16,334 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
மாவட்ட சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் சோதனை முடிவுகள் குறித்த விவரங்களை முழுமையாக தெரிவிக்காத நிலையே தொடர்கிறது.

Next Story