சேலம் அருகே பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை
சேலம் அருகே பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் அருகே பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி பெண்
சேலம் அருகே உள்ள தாதம்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மகள் திவ்யலட்சுமி (வயது 23). பி.எஸ்சி. பட்டதாரி.
திவ்யலட்சுமி கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதியுற்று வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள குளியலறையில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
சாவு
இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தத்தை கேட்டு உறவினர்கள் அங்கு ஓடி சென்றனர். ஆனால் திவ்யலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யலட்சுமி தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story