சிவகிரியில் கால்வாயில் மிதந்த ஆண் பிணம் மீட்பு


சிவகிரியில் கால்வாயில் மிதந்த ஆண் பிணம் மீட்பு
x
தினத்தந்தி 10 Feb 2021 2:51 AM IST (Updated: 10 Feb 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் கால்வாயில் மிதந்த ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றினர்.

சிவகிரி:

சிவகிரியில் தென்காசி -மதுரை தேசிய நெடுஞ்சாலையின் அருகே தொட்டிச்சிமலை ஆற்றின் பகுதியை சேர்ந்த முத்தூர் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர். கால்வாயில் மிதந்த பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story