ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பெண் ஊழியர்கள் கும்மியடித்து போராட்டம்
ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பெண் ஊழியர்கள் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பெண் ஊழியர்கள் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3½ லட்சம் ஊழியர்களுக்கு...
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட 3½ லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களாக தினமும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கும்மியடித்து போராட்டம்
அதன்படி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் நேற்று காலை திரண்டனர். அவர்கள் கச்சேரி வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது பெண் ஊழியர்கள் வட்டமாக நின்றுகொண்டு கும்மியடித்து நூதன போராட்டத்தை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டவுன் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 46 பெண்கள் உள்பட மொத்தம் 86 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story