தமிழக-கர்நாடக எல்லையில் இன்று வாட்டாள் நாகராஜ் முற்றுகை போராட்டம் அறிவிப்பு; பலத்த போலீஸ் பாதுகாப்பு


தமிழக-கர்நாடக எல்லையில் இன்று வாட்டாள் நாகராஜ் முற்றுகை போராட்டம் அறிவிப்பு; பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 Feb 2021 4:31 AM IST (Updated: 10 Feb 2021 4:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கா்நாடக மாநில எல்லையில் வாட்டாள் நாகராஜ் இன்று (புதன்கிழமை) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். இதனால் எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தாளவாடி
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதி தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் கன்னட மொழி பேசும் மக்களும் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அவரது ஆதரவாளர்களுடன் தாளவாடி மற்றும் ஊட்டி பகுதியை கர்நாடக மாநிலத்தில் சேர்க்க கோரி இன்று (புதன்கிழமை) தமிழக கர்நாடக எல்லையான கும்பாரகுண்டி அருகே முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து தாளவாடி அடுத்த தமிழக-கர்நாடக மாநில எல்லையான கேர்மாளம், காரப்பள்ளம், கும்பாரகுண்டி, பாரதிபுரம், அருள்வாடி, ராமபுரம், எத்திகட்டை ஆகிய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. கடந்த மாதம் தமிழக எல்லையில் வைக்கபட்டிருந்த தமிழக அறிவிப்பு பலகையை கன்னட சலுவளி கட்சியினர் சேதப்படுத்திய நிலையில் தப்போது இந்த முற்றுகை அறிவிப்பால் மாநில எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story