திருமண ஆசைகாட்டி சிறுமி பலாத்காரம்


திருமண ஆசைகாட்டி சிறுமி பலாத்காரம்
x
தினத்தந்தி 10 Feb 2021 5:36 AM IST (Updated: 10 Feb 2021 5:36 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் திருமண ஆசைகாட்டி சிறுமியை பலாத்காரம் செய்த போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

காரைக்கால், பிப்.9-
நாகை மாவட்டம் விக்னாபுரத்தைச் சேர்ந்தவர் அஞ்சான் மகன் அஜித் (வயது21). கூலி தொழிலாளி. இவர், காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அஜித்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி, தனியாக வீட்டில் இருந்த சிறுமியை அஜித் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், நெடுங்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

Next Story