கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 10 Feb 2021 8:10 AM IST (Updated: 10 Feb 2021 8:10 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அதனை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வாசித்தனர். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தெருக்கூத்து நாடக கலைஞர்கள் வாயிலாக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரெயில்நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் நாடக கலைஞர்களை கொண்டு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story