திருவள்ளூரில் 8-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 35 பேர் கைது


திருவள்ளூரில் 8-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 35 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2021 8:14 AM IST (Updated: 10 Feb 2021 8:14 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் 8-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 8-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. 

இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 35 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story