மு.க.ஸ்டாலினை விட அ.தி.மு.க. ஆட்சிக்கு அதிகம் தொல்லை கொடுத்தவர் டி.டி.வி.தினகரன் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி


மு.க.ஸ்டாலினை விட அ.தி.மு.க. ஆட்சிக்கு அதிகம் தொல்லை கொடுத்தவர் டி.டி.வி.தினகரன் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
x
தினத்தந்தி 10 Feb 2021 8:37 AM IST (Updated: 10 Feb 2021 8:37 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சிக்கு மு.க.ஸ்டாலினை விட அதிகம் தொல்லை கொடுத்தவர் டி.டி.வி.தினகரன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் சங்கரமடத்துக்கு நேற்று வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற அவர் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியை ஒழித்துவிட வேண்டும் என்று அதிகம் எண்ணியவர் டிடிவி.தினகரன். தினகரன் கட்சி ஆரம்பித்து கட்சி கொடியையும், சின்னத்தையும் வேட்பாளர்களையும் அறிவித்த போது, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆசி வழங்கிவிட்டு, இப்போது சசிகலா அ.தி.மு.க.வுக்கு உரிமை கொண்டாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம், அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வீ.வள்ளிநாயகம், பெரிய காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story