திருவள்ளூரில் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


திருவள்ளூரில் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2021 9:04 AM IST (Updated: 10 Feb 2021 9:04 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் இந்திய மருத்துவ சங்கத்தினர் கலப்பு மருத்துவ முறையை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று இந்திய மருத்துவ சங்கம், இந்திய பல் மருத்துவ சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் சார்பில் கலப்பு மருத்துவ முறையை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயராஜ், பொருளாளர் பிரேம்குமார், நிர்வாகிகள் சேகர், ராஜசேகர், தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு சமீபத்தில் ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதனால் மருத்துவத்துறைக்குள் கலப்படம் ஏற்பட்டு மக்களிடையே மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்று கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டன்.

பின்னர் அவர்கள் இருசக்கர வாகன பேரணியை நடத்தினர். திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து முக்கிய சாலை வழியாக கலெக்டர் அலுவலகம் வரை சென்ற பேரணி ஆஸ்பத்திரி வளாகத்திலேயே முடிவடைந்தது.

Next Story