கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரெயிலில் முதல் வகுப்பு வேண்டும் - பெண் பயணிகள் கோரிக்கை
கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரெயிலில் முதல் வகுப்பு வேண்டும் என்று பெண் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னை,
சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டு வரும் 4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் முதல் வகுப்பு மற்றும் பெண்களுக்கு தலா ஒரு பெட்டிகளும், 2 பெட்டிகள் பொதுப்பெட்டிகளாகவும் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா நோய் பரவல் தடுப்பு காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு அரசின் விதிகளை பின்பற்றுவதற்காக முதல்வகுப்பு பெட்டி பெண்கள் பெட்டியாக மாற்றப்பட்டன. இதனால் 2 பெண்கள் பெட்டி யும், 2 பொதுப்பெட்டியுமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது அலுவலக நேரமான காலை 8 மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அலுவலகங்களுக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களில் இயக்கப்பட்டு வந்த ரெயில் தற்போது 7 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதுடன், கூட்டத்திலும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் விரிவாக்கமும் திறக்கப்பட்டால் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். இதனால் பழைய முறைப்படி முதல் வகுப்பு கொண்டு வருவதுடன், அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற முறையை கொண்டு வர வேண்டும் என்று பெண் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story