11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தோழியின் தந்தை கைது


11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தோழியின் தந்தை கைது
x
தினத்தந்தி 10 Feb 2021 11:31 AM IST (Updated: 10 Feb 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தோழியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது. சிறுமி தனது தோழி வீட்டுக்கு அடிக்கடி செல்வார். அப்போது தோழியின் தந்தை சசிகுமார் (வயது 44) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சசிகுமாரை கைது செய்யப்பட்டார்.

Next Story