ஆவடி சட்டமன்ற தொகுதியில் புதிதாக 222 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு
ஆவடி சட்டமன்ற தொகுதியில் புதிதாக 222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆவடி,
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரதான கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 427 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. கொரோனா பரவலால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து புதிதாக 222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆவடி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 181 வாக்குச்சாவடி மையங்கள் அதே வளாகத்துக்குள்ளும், 41 மையங்கள் அருகில் உள்ள இடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அனைத்து கட்சியினரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story