மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் - கட்டிடத்தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை


மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் - கட்டிடத்தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 10 Feb 2021 12:03 PM IST (Updated: 10 Feb 2021 12:03 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட கட்டிடத்தொழிலாளியை கல்லால் அடித்துக்கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 51). கட்டிடத்தொழிலாளி. இவரது வீட்டின் அருகே 3 பேர் மோட்டார் சைக்கிளை அதிகவேகமாக ஒட்டிச்சென்றனர்.

இதனை சேகர் தட்டிக்கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் இதற்காக சேகரின் மகன்களிடமும் அவர்கள் சண்டைபோட்டனர்.

அப்போது 3 பேரும் தனது மகன்களை அடிக்காத வகையில் சேகர் தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அருகில் இருந்த கல்லை தூக்கி சேகரின் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சேகர், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து இருந்த கண்ணகிநகர் போலீசார், இது தொடர்பாக துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பார்த்திபன் (22), வெங்கடேஷ் (27) உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சேகர் உயிரிழந்ததால் கண்ணகிநகர் போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story