கோவில்பட்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியல் 197 பேர் கைது
கோவில்பட்டியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபடட அரசு ஊழியர் சங்கத்தினர் 197 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபடட அரசு ஊழியர் சங்கத்தினர் 197 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்னர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம வருவாய் உதவியாளர்கள், கிராம நூலகர்கள், கிராம செவிலியர்கள் 3லட்சத்து50ஆயிரம் பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரியும், தமிழகத்தில் அரசு துறைகளில் காலி பணியிடங்கள் 4 லட்சத்தி 50 ஆயிரம்பேரை உடனடியாக நிரப்ப கோரியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியம் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, ஓய்வூதிய பலன்கள் கிடைக்க உத்தரவிடக் கோரியும் இந்த போராட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் முருகன், ஓய்வூதியர் சங்க தலைவர் முனியாண்டிசாமி, தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், சத்துணவு ஊழியர் சங்க வட்டார செயலாளர் செல்லத்துரை உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
197 பேர் கைது
இந்த போராட்டத்தினால் பஸ்நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன் உத்தரவின் பேரில், மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 167 பெண்கள் உள்பட 197 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story