டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 10 Feb 2021 6:28 PM IST (Updated: 10 Feb 2021 6:28 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நேற்று கோவில்பட்டியில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கோவில்பட்டி:
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நேற்று கோவில்பட்டியில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
விவசாயிகளுக்கு அஞ்சலி
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்தச்சட்டத்தை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 3 மாதமாக பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 
இந்த போராட்டத்தில்  உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ் தலைமையில் மெழுகுவத்தி ஏந்தி விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 
கலந்து கொண்டவர்கள்
இதில் வட்டாரத் தலைவர் ரரமேஷ்மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் வீரப்பெருமாள், மாவட்ட செயலாளர் கொம்பையா, தகவல் அறியும் சட்டம் மாவட்ட தலைவர் ராஜசேகர், வட்டார பொதுச்செயலாளர்கள் பிரபாகரன், சண்முகம், அந்தோணிமுத்து, நகர துணைத்தலைவர்கள் வேல்சாமி, சுந்தர்ராஜ், சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story