துள்ளிக்குதித்து விளையாடிய டால்பின்கள்
மண்டபம் கடல் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துள்ளி குதித்து டால்பின்கள் விளையாடியன.
பனைக்குளம்,
மண்டபம் கடல் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துள்ளி குதித்து டால்பின்கள் விளையாடியன.
21 தீவுகள்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு முதல் தூத்துக்குடி வரையிலான தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன.
இந்த 21 தீவுகளை சுற்றிலும் கடலுக்கு அடியில் பல அரிய வகை பவளப்பாறை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர டால்பின், ஆமை, கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
மண்டபம் வனசரகத்திற்கு உட்பட்ட சிங்கலித் தீவு, குருசடை தீவு, மனோலி தீவு, முயல் தீவு உள்ளிட்ட தீவுகள் உள்ளன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளில் உள்ள கடல் பகுதியிலேயே பாம்பன் மற்றும் மண்டபம் அருகே உள்ள தீவுப் பகுதிகளில் டால்பின்கள் அதிக அளவில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
குட்டி டால்பின்
பாம்பன் குருசடை தீவு கடல் பகுதி மற்றும் ரோடு பாலத்தின் அருகே உள்ள கடல் பகுதிகளிலும் டால்பின்கள் அவ்வப்போது நீந்துவது, விளையாடுவதையும் பார்க்கலாம். இந்த நிலையில் மண்டபம் மற்றும் பாம்பனுக்கும் இடைப்பட்ட தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று கடற்கரை பூங்கா அருகே உள்ள கடல் பகுதியில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட டால்பின்கள் நீந்தியபடி, துள்ளிக் குதித்தபடி விளையாடிக் கொண்டிருந்தன. இதில் ஒரு குட்டி டால்பினும், பெரிய டால்பின்களோடு சேர்ந்து துள்ளிக் குதித்து விளையாடியது.
Related Tags :
Next Story