ஆரணி; மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்
ஆரணி அருகே மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணியில் 2 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து, ஆரணி இரும்பேடு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
போலீசார், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுகிறோம், நீங்கள் அனைவரும் விடுதலையாகி வீட்டுக்குச் செல்லலாம் என அறிவித்தனர். ஆனால் 338 மாற்றுத்திறனாளிகளும் மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கேயே தங்கியியிருந்த அவர்களுக்கு போதிய கழிப்பிட வசதி, நடந்து செல்வதற்கான வசதி, குளிப்பதற்கான வசதிகள் இல்லை எனக்கூறி, அவர்கள் ஆரணி-ஆற்காடு சாலையில் இரும்பேடு ஏ.சி.எஸ். கல்லூரி அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ஆரணி போலீசார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை ஆரணி எஸ்.வி.நகரம் ஊராட்சிக்குட்பட்ட சுபான்ராவ்பேட்டையில் உள்ள மற்றொரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அப்போது அவர்கள், எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம், எனக் கூறி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story