திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்பு போராட்டம்
கைது செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ள திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத இடம் வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டதோடு, அங்கு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் விக்கிரவாண்டி, திண்டிவனம், மேல்மலையனூர், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, கண்டாச்சிபுரம் ஆகிய இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 776 பேர் கைது செய்யப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளை மாலை 6 மணியளவில் போலீசார் விடுதலை செய்தனர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையில் மண்பங்களை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என கூறி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது. கண்டாச்சிபுரம், திண்டிவனம், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு உள்ளிட்ட 6 இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story