எரிந்த நிலையில் கிடந்த மோட்டார் சைக்கிள் போலீஸ் விசாரணை


எரிந்த நிலையில் கிடந்த மோட்டார் சைக்கிள் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Feb 2021 10:56 PM IST (Updated: 10 Feb 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே எரிந்த நிலையில் கிடந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீசாா் விசாாித்து வருகின்றனா்.

ராமநத்தம்,
கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள  தொழுதூரில் இருந்து தச்சூர் செல்லும் சாலையில் தனியார் கியாஸ் குடோன் ஒன்று உள்ளது. இதன் அருகே செல்லும் காட்டு பாதையில், மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது.

இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், மோட்டார் சைக்கிள் யாருக்கு சொந்தமானது? தீ வைப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story