ரூ.8 லட்சம் கையாடல் செய்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்


ரூ.8 லட்சம் கையாடல் செய்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 10 Feb 2021 11:16 PM IST (Updated: 10 Feb 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 லட்சம் கையாடல் செய்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நாகர்கோவில்:
திங்கள்சந்தையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 லட்சம் கையாடல் செய்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கையாடல் 
திங்கள்சந்தை தலக்குளம் புதுக்குளத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 42). இவர் புதுக்குளம் ஊர் தலைவராக இருந்தபோது ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் ஏலச்சீட்டு நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து கந்தசாமியின் பதவி காலம் முடிவடைந்தது. 
அதன்பிறகு புதிய தலைவராக வீரமணி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2006-ம் ஆண்டு ஏலச்சீட்டு தொடர்பாக ஆய்வு செய்தபோது கந்தசாமி ரூ.8 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வீரமணி புகார் செய்தார். அதன்பேரில் கந்தசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, அவரை கைது செய்தனர்.
3 ஆண்டு ஜெயில் 
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட்டு கிறிஸ்டியன் விசாரணை நடத்தி் நேற்று தீர்ப்பு கூறினார். 
அதில் கந்தசாமிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் யாசின் முபாரக்அலி ஆஜராகி வாதாடினார்.

Next Story