ரத்தத்தில் சர்க்கரை குறைய யானைகளுக்கு நடை பயிற்சி


முகாமில் யானைகள் நடைபயிற்சி மேற்கொண்ட போது எடுத்த படம்
x
முகாமில் யானைகள் நடைபயிற்சி மேற்கொண்ட போது எடுத்த படம்
தினத்தந்தி 10 Feb 2021 11:30 PM IST (Updated: 10 Feb 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில், ரத்தத்தில் சர்க்கரை குறைய யானைகளுக்கு நடை பயிற்சி அளிக்கப்பட்டது. யானைகள் ஷவரில் உற்சாக குளியல் போட்டு குதுகலம் அடைந்தன

மேட்டுப்பாளையம் 

மேட்டுப்பாளையம்  நலவாழ்வு முகாமில், ரத்தத்தில் சர்க்கரை குறைய யானைகளுக்கு நடை பயிற்சி அளிக்கப்பட்டது. யானைகள் ஷவரில் உற்சாக குளியல் போட்டு குதுகலம் அடைந்தன.

நடை பயிற்சி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 8 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 முகாமில் தமிழகத்திலுள்ள கோவில்களுக்கு சொந்தமான 21 யானைகள் திருமடங்களுக்கு சொந்தமான 3 யானைகள் புதுச்சேரி மாநிலத்திற்கு சொந்தமான 2 யானைகள் என மொத்தம் 26 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. 

 முகாமில் கலந்து கொண்ட யானைகளுக்கு காலை மாலை 2 வேளையும் நடை பயிற்சி அளிக்கப்படுகிறது.முகாமில் நடை பயிற்சியின் போது அனைத்து யானைகளும்  அணிவகுத்து வரும் அழகோ

 அழகு. நடை பயிற்சி மூலம் ரத்தத்தில் சர்க்கரை குறைய வாய்ப்பு இருக்கும். அதற்காகவே இந்த நடைபயிற்சி விஷேசமாக அளிப்பதாக கால்நடை மருத்துவர் ஒருவர் கூறினார். மேலும் யானைகளின் ஜீரண சக்தியும் இதனால் மேம்படும் என்றார்.

உற்சாக குளியல்

இதை தொடர்ந்து ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள குளியல் (ஷவர்) மேடைகளில் யானைகள் ஆனந்த குளியல் போடுகின்றன. இந்த குளியல் மேடைகளுக்கு யானைகள் வந்ததும், பாகன்கள் ஷவரில் குளிக்க தண்ணீரை பாய்ச்சுகிறார்கள். தண்ணீர் உடலில் பட்டதும், யானைகள் உற்சாகத்துடன் துதிக்கையை தூக்கி அசைப்பது நன்றி கூறுவதுபோல் உள்ளது.

 குளிக்கும்போது சில யானைகள் கீழே படுத்துக்கொண்டும், புரண்டுகொண்டும் குளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. அப்போது பாகன்கள் அவற்றின் உடலுக்கு சோப்பு போட்டு அழுக்கு தேய்த்து குளிப்பதும், அதனை யானைகள் சுகமாக வாங்கிக்கொண்டு படுத்து கிடப்பதும் குழந்தை குளியலாகவே உள்ளது. உற்சாக குளியல்போட்டு குதுகலம் அடைந்தன.

இதற்கிடையில் ஆசை தீர குளித்தாலும் சில யானைகள் அந்த இடத்தை விட்டு அசையாமல் இருப்பதையே விரும்புகின்றன. இருப்பினும் பாகன்களின் பாஷைக்கு அவைகள் கட்டுப்பட்டு, முகத்தை தொங்க போட்டுக்கொண்டு அங்கிருந்து நடையை கட்டுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

சூட்டை தணிக்க உணவுடன் வெண்ணெய்பின்னர்  அந்த யானைகளுக்கு சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 

 முகாமில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காலை மாலை இரண்டு வேளையும் மருத்துவக்குழுவினரால் யானைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின் பேரில் யானையின் வயது, எடை ஆகியவற்றுக்கு தகுந்தவாறு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. சில யானைகளுக்கு உடல்சூட்டை தணிக்க சமச்சீர் உணவுடன் வெண்ணெய் சேர்த்து வழங்கப்பட்டது. 

இதில் சிவகங்கை காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் யானை சொர்ணவள்ளிக்கு உடல் சூடு அதிகமாக இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. 

இதனால் அதன்  உடல் சூட்டைத் தணிப்பதற்காக சமச்சீர் உணவுடன் வெண்ணெய் கலந்து வழங்கப்பட்டதாக பாகன்கள் தெரிவித்தனர்.  

Next Story