அரசு ஊழியர்கள் சாலை மறியல்
நாகையில் 9-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்;
நாகையில் 9-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
நாகையில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 9-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் முன்னிலை வகித்தார். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுசெயலாளர் கலந்து கொண்டு பேசினார். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கைது
அரசுத்துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும். எ, பி. பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த மறியில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 15 பேரை கைது செய்து நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story