விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
லாலாபேட்டை
டெல்லியில் போராட்டம் நடத்தி உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி லாலாபேட்டை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்தது. இதையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைபோல் லாலாபேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல், புன்செய் புகளூர் காங்கிரஸ் கட்சி சார்பில், ேவலாயுதம்பாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு, டெல்லியில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நகர தலைவர் கமல் ராஜேந்திரன், வட்டாரதலைவர் தீனத்தயாளன், மேற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story