தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்


தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 10 Feb 2021 6:50 PM GMT (Updated: 10 Feb 2021 6:50 PM GMT)

தேவகோட்டையில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நடந்தது.

தேவகோட்டை,
தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் தமிழ்நாடு 9-வது தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் 5 நாட்கள் நடைபெற்றது. முகாமை காமாண்டிங் ஆபீசர் கர்னல் ரஜ்னீஸ் பிரதாப் தொடங்கி வைத்தார்.  9-வது படைப்பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி லெப்டிெனன்ட் கர்னல் அஜய்பர்கோட்டி பேசும் போது, கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், முககவசம் அணிதல், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
 பயிற்சி முகாமில் ராணுவ அணிவகுப்பு, துப்பாக்கியை கையாளுதல், வரைபடம் படித்தல், போர்க்கால மற்றும் தகவல் தொடர்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. கல்லூரி செயலர் ஜேசுராஜ் கிறிஸ்டி, முதல்வர் ஜான் வசந்தகுமார் நன்றி தெரிவித்தனர்.
முகாமில் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரிகள் கேப்டன் செல்வராஜ், லெப்டினென்ட் மாரி, வித்யா, ஆனந்த் தேவகோட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர், இந்த முகாமில் 125 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Next Story