சாலையோரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்


சாலையோரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 10 Feb 2021 6:52 PM GMT (Updated: 10 Feb 2021 6:52 PM GMT)

சாலையோரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது

வேலாயுதம்பாளையம்
சாலையோரத்தில் கழிவுகள்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், ஆகிய பகுதிகளில் இருந்து கோழி இறக்கைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மூட்டை, மூட்டைகளாக கட்டி, வேன் மூலம் கொண்டு வந்து, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர்.
 இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் செயல்படும் கோழிக்கடை, வாத்துக்கடைகள் உள்ள பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம் விதித்தனர். 
கோரிக்கை 
இந்தநிலையில், மீண்டும் வேலாயுதம்பாளையம் சாலையோரத்தில் பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து வேன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலையோரத்தில் கொட்டி சென்று விடுகின்றனர். இதனால் அதில், இருந்து கொசு, புழுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 
எனவே இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் இரவு நேரத்தில் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story