புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி


புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 11 Feb 2021 12:27 AM IST (Updated: 11 Feb 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

கந்தர்வகோட்டை, பிப்.11-
கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும். ஆனால் பண்டைக்காலத்தில் தை மாதம் கடைசி செவ்வாய் அன்று இந்த திருவிழாவானது கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தை மாதம் என்பது அறுவடை காலமாக இருந்ததால் பின்பு இந்த திருவிழா ஏப்ரல் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது. ஆனாலும் இந்த நாளை நினைவு கூறுகின்ற வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவிலான தேர்பவனி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story