அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
மறியல் போராட்டம் செய்து வரும் அரசு ஊழியர்கள், காலமுறை ஊதியத்திற்காக போராடும் வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட டி.ஏ. சரண்டரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மகாவிஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். இதில் அரசகுமார், பாபு உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story