உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி


உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 11 Feb 2021 12:52 AM IST (Updated: 11 Feb 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி புங்கோடை, குளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர். விளைந்தவுடன் கரும்பை வெட்டி எடுத்துச் செல்வதற்காக புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். தேவையைவிட வெல்லம் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரங்களில் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அச்சுவெல்லம் ரூ.1350-க்கும், உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,300-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1050-க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1080 விற்பனையானது. ஒரு டன் கரும்பு ரூ.2,700 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story