சுவிசேஷபுரம் குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் 10-வது மடை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால், சுவிசேஷபுரம் குளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை மும்முரமாக தொடங்கி உள்ளனர்.
இட்டமொழி:
மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் 10-வது மடை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால், சுவிஷேசபுரம் குளம் நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் விவசாய பணிகளை மும்முரமாக தொடங்கி உள்ளனர்.
வறண்ட குளங்கள்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக, பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு குளங்களும் நிரம்பிய நிலையில், திசையன்விளை பகுதி குளங்களுக்கு மட்டும் போதிய தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.
எனவே அப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழிலும் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் 10-வது மடை வழியாக வினாடிக்கு 50 கன அடி வீதம் திசையன்விளை பகுதியில் உள்ள குளங்களுக்கு கடந்த 3-ந்தேதியில் இருந்து வருகிற 28-ந்ேததி வரையிலும் தண்ணீர் வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
சுவிஷேசபுரம் குளம் நிரம்பியது
அதன்படி மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் 10-வது மடை வழியாக கடந்த ஒரு வாரமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் இட்டமொழி அருகே உள்ள பட்டஞ்சேரிகுளம், விஜயஅச்சம்பாடு குளம், இ்ட்டமொழி குளம், சுப்பிரமணியபுரம் குளம் ஆகியவை அடுத்தடுத்து நிரம்பி சுவிஷேசபுரம் குளத்துக்கு தண்ணீர் ெசன்றது.
நேற்று காலையில் சுவிேஷசபுரம் குளமும் நிரம்பியதால் புதுக்குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. புதுக்குளம் நிரம்பியதும், திசையன்விளை பகுதியில் உள்ள கல்குளம், நந்தன்குளம் அப்புவிளைகுளம், எருமைகுளம், அவிச்சான்குளம், இலக்குளம், கடகுளம், ஆயன்குளம் படுகை, ஆனைகுடி படுகை போன்றவற்றுக்கு தண்ணீர் வழங்கப்படும். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தட்டுப்பாடு இல்லை
இதுகுறித்து சுவிஷேசபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஜெபத்துரை (வயது 56) கூறுகையில், ‘முதல்-அமைச்சரின் சிறப்பு ஆணை மூலம் மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் 10-வது மடை வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால், திசையன்விளை பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை’ என்று கூறினார்.
ஷட்டர் அமைக்க...
விவசாயி முத்து நாடார் (67) கூறுகையில், ‘சுவிேஷசபுரம் குளம், புதுக்குளம் போன்றவற்றில் ஷட்டர் இல்லாததால், தண்ணீரை நீண்ட நாட்களுக்கு தேக்கி வைக்க இயலாது. மேலும் ஷட்டர் இல்லாத குளத்தின் கரையை உடைத்து, அடுத்த குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தண்ணீர் விரயமாகும். எனவே அனைத்து குளங்களுக்கும் ஷட்டர் அமைத்து, தண்ணீரை நீண்ட நாட்களுக்கு தேக்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
‘தினத்தந்தி’க்கு பாராட்டு
இட்டமொழியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி நம்பித்துரை (59) கூறுகையில், ‘முதல்-அமைச்சரின் சிறப்பு ஆணையால் பல ஆண்டுகளுக்கு பிறகு இட்டமொழி, திசையன்விளை பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பும் நிலை உள்ளது. இதற்கு தக்க நேரத்தில் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழையும், நடவடிக்கை மேற்ெகாண்ட அதிகாரிகளையும் பாராட்டுகிறோம்’ என்றார்.
Related Tags :
Next Story