நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்


நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2021 1:37 AM IST (Updated: 11 Feb 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

2-வது நாளாக...

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று முன்தினம் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நேற்று 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி தனியார் துறையில் 5 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கைது

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தியாகராஜன், குமாரசுவாமி, சங்கரசுப்பு கன்னிமரியாள், மணிகண்டன், அந்தோணி ஆபிரகாம் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர் 4 பெண்கள் உள்பட 15 பேரை கைது செய்தனர். அவர்கள் நெல்லை வண்ணாா்பேட்டையில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story