நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 11 Feb 2021 1:44 AM IST (Updated: 11 Feb 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்

புதுச்சேரி, பிப்.10-
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் பாடங்கள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டு உள்ளன. 
இந்தநிலையில்   ஆன்லைன்  மூலம்   தேர்வுகள்  நடத்தப் படாது, மாணவிகள் நேரடியாகவே தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து    மாணவிகள்  வகுப்புகளை  புறக்கணித்து  தர்ணாவில் ஈடுபட்டனர். 
இதனால் கல்லூரி வளாகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாக தரப்பில் மாணவிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தேர்வுகள் தொடர்பாக நல்ல  முடிவு  எடுக்கப்படும்  என்று உறுதியளிக்கப்பட்டது. அதை  ஏற்று மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story