மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 Feb 2021 1:46 AM IST (Updated: 11 Feb 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மத்தூர்,

போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருணாகரன் (வயது 61). இவர் பல நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இந்தநிலையில் கருணாகரன் தவறுதலாக அங்குள்ள மின்சார கம்பியை தொட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கருணாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story