பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 11 Feb 2021 1:52 AM IST (Updated: 11 Feb 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே நாடார்மங்கலத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 65). இவரது மனைவி செங்காய் (56). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்துள்ளனர். பின்னர் பாண்டி தனது வளர்ப்பு நாயை கூட்டிக்கொண்டு வெளியே நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் வீட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த செங்காயியை கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க தாலியை பறித்து விட்டு வீட்டின் பின்புறம் குதித்து தப்பி விட்டனர்.  இது குறித்து திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ரகு, டவுன் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். நகை பறித்த ஆசாமிகள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.


Next Story