லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்
நாகமலைபுதுக்கோட்டை,பிப்
வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி மந்தை தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் அழகுராஜா (வயது 36). அதே ஊரைச் சேர்ந்தவர் தாடகநாச்சிபுரம் சின்னக்கூத்தன் மகன் வனராஜா (வயது 40). இவர்கள் இருவரும் விறகு வெட்டும் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று மாலை 6 மணி அளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டியில் இருந்து நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள மொட்டமலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீனிவாசா காலனி அருகே சென்றபோது முன்னால் சென்ற சரக்கு லாரி வலது புறமாக திரும்புவதற்காக திடீரென நின்றதால் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறம் மோதி விபத்தில் சிக்கியது. இதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த வனராஜா மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story