நாய்க்கு வீட்டுக்குள் சமாதி கட்டி வழிபடும் குடும்பத்தினர்


நாய்க்கு வீட்டுக்குள் சமாதி கட்டி வழிபடும் குடும்பத்தினர்
x
தினத்தந்தி 11 Feb 2021 1:54 AM IST (Updated: 11 Feb 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நாய்க்கு வீட்டுக்குள் சமாதி கட்டி வழிபடும் குடும்பத்தினர்

மதுரை, பிப்
மதுரை பெத்தானியாபுரம் அகஸ்தியர் தெருவை சேர்ந்தவர் வாசகராஜா. இவருடைய மனைவி விஜயா. இவர்கள் மணி என்று பெயரிட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். அந்த நாய் திடீரென இறந்து போனது. அதன் மீது கொண்ட பாசத்தால் நாய்க்கு வீட்டிற்குள்ளேயே சமாதி கட்டி அதனை அந்த குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர். இது குறித்து, அவர்கள் கூறுகையில், கடந்த 5 வருடங்களாக வீட்டில் ஒரு குழந்தை போல் மணி வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் சுட்டித்தனமும், புத்திசாலித்தனமும் நிறைந்த மணி தான் எங்களது குழந்தை. அதற்கு தனியாக தங்கச் செயினும் செய்து அதன் கழுத்தில் அணிவித்து அழகு பார்த்து வந்தோம். அந்த நாயின் இறப்பால் மிகுந்த மன வருத்தமடைந்த நாங்கள், அது வழக்கமாக உறங்கும் இடத்திலேயே புதைத்து விட்டோம். தற்போது, அதன் நினைவாக எங்கள் வீட்டுக்குள்ளே சமாதி எழுப்பி வழிபட்டு வருகிறோம் என்றனர். 

Next Story