திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது


திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2021 1:55 AM IST (Updated: 11 Feb 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜீயபுரம்,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நேற்று மாலை இந்து மக்கள் கட்சி சார்பில் வேன் ஊர்வலம் மற்றும் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் போலீஸ் தடையை மீறி வேன் ஊர்வலம் மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பொதுச் செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று பகல் கோவையிலிருந்து காரில் திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்ல புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை வந்தபோது, ஜீயபுரம் போலீசார் அர்ஜுன் சம்பத், குருமூர்த்தி உள்ளிட்ட 3 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story