இலவச வேட்டி-சேலைகளை திருடிய 2 பேர் கைது


இலவச வேட்டி-சேலைகளை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2021 1:56 AM IST (Updated: 11 Feb 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி-சேலைகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலங்குடி,பிப்.11-
ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி-சேலைகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேட்டி-சேலைகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள அறையில் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட இலவச வேட்டி-சேலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று  இரவு ஆலங்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தாலுகா அலுவலகம் முன் மினிவேன் நின்றுகொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அருகே சென்று பார்த்தபோது, 2 பேர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இலவச வேட்டி-சேலைகளை திருடி வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வேங்கிடக்குளம், நந்தவனம் கீழத்தெருவை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (வயது 27), வல்லத்திராகோட்டை காடையன் தோப்பு பகுதியை சேர்ந்த சிவமணி (28) என தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.

Next Story