ஸ்ரீரங்கத்தில் யாத்ரி நிவாஸ் திறப்பு
ஸ்ரீரங்கத்தில் யாத்ரி நிவாஸ் திறக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரையில் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் என்ற பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த தங்கும்விடுதி கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தங்கும் விடுதி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதையொட்டி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவுறுத்தலின்படி யாத்ரி நிவாஸில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதில் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அறங்காவலர்கள் கவிதா, சீனிவாசன், யாத்ரி நிவாஸ் கண்காணிப்பாளர் புண்ணியமூர்த்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story