கரிவலம்வந்தநல்லூரில் கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா


கரிவலம்வந்தநல்லூரில் கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா
x
தினத்தந்தி 11 Feb 2021 2:20 AM IST (Updated: 11 Feb 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

கரிவலம்வந்தநல்லூரில் கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடந்தது.

சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை கரிவலம்வந்தநல்லூரில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மனோகரன் எம்.எல்.ஏ., இணைபதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, மண்டல இணை பதிவாளர் அழகிரி, முதன்மை வருவாய் அலுவலர் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன் ஆகியோர்    முன்னிலை  வகித்தனர். அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, வங்கி கிளையை திறந்து வைத்தார். 
நிகழ்ச்சியில் துணை பதிவாளர் முத்துசாமி, பொது மேலாளர் செல்லப்பாண்டியன், பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், விவசாய அணி செயலாளர் பரம குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story