பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் இயக்கம்
பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு புதிதாக அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு நேரடி பஸ் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு புதிய அரசு விரைவு பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டது. இந்த பஸ் தினசரி மாலை 6 மணிக்கு பாவூர்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம், மதுரை வழியாக சென்னைக்கு மறுநாள் காலை 6 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல் சென்னையில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு பாவூர்சத்திரம் வந்தடைகிறது. இந்த பஸ்சுக்கு நேற்று பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் மக்கள் நல மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story