தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:
தென்காசியை அடுத்த மேலகரம் பஸ் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலகரம் பேரூராட்சியில் நடைபெறும் கட்டுமான பணிகளை திட்ட அறிக்கையில் உள்ளபடி முறையாகவும், குறித்த நேரத்தில் விரைந்தும் முடிக்க வேண்டும். சுகாதார பணியாளர்களையும் பொதுமக்களையும் தரக்குறைவாக பேசி வரும் சுகாதார பணி இழுவை வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்னகரத்தில் 8, 9-வது வார்டு பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் தலைமை தாங்கினார். தென்காசி ஒன்றிய செயலாளர் பிரபாகர், மாவட்ட துணைச் செயலாளர் சித்திக், நில மீட்பு குழு மாநில துணைச்செயலாளர் துரை அரசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ஆஷிக் உசேன், சுரண்டை மணி, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story