சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்:
சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் காலதாமதமின்றி குறிப்பிட்ட தேதியில் ரசீதுடன் சம்பளம் வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.
கோஷம்
இதில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர்கள் மோகன், வடிவேல் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story