கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5-வது நாள் போராட்டம்


கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5-வது நாள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2021 4:44 AM IST (Updated: 11 Feb 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

கல்வி கட்டணத்தை குறைக்கக்கோாி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தினாா்கள்.

பெருந்துறை
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்ற அரசு கல்லூரிகளில் இருப்பது போல, தங்களிடமும் குறைந்த அளவு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 4  நாட்களாக பல்வேறு போராட்டங்களையும், உள்ளிருப்பு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. 
நேற்று கல்லூரி கலை அரங்கத்திற்குள்ளேயே மாணவ-மாணவிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.  தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று மாணவ- மாணவிகள் கூறினார்கள். 

Next Story