எடப்பாடி பழனிசாமிக்கு சனிப்பெயர்ச்சியை விட சசிப்பெயர்ச்சியால் பாதிப்பு - நாஞ்சில் சம்பத் பேச்சு


எடப்பாடி பழனிசாமிக்கு சனிப்பெயர்ச்சியை விட சசிப்பெயர்ச்சியால் பாதிப்பு - நாஞ்சில் சம்பத் பேச்சு
x
தினத்தந்தி 11 Feb 2021 4:48 AM IST (Updated: 11 Feb 2021 4:55 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமிக்கு சனிப்பெயர்ச்சியை விட சசிப்பெயர்ச்சியால் பாதிப்பு என்று ஆனைமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சினார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் திவான் சாபுதூர்கலைஞர் திடலில்  தி.மு.க.சார்பில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில், கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் வடமாநிலங்கள், காஷ்மீரில் தொடங்கி திரிபுரா, அசாம், ஜார்கண்ட் முதல் கர்நாடகா வரை தனது அதிகார பலத்தினாலும், பணபலத்தினாலும் அங்கு உள்ள சிலரை விலைக்கு வாங்கி கட்சியை வளர்த்து ஆட்சியை பிடித்து வருகிறது. 

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படும் போது அதனை தட்டிக் கேட்காமல் அவர்களுக்கு ஒத்து ஊதுகிறார்.  தமிழகத்தில்  படித்தவர்கள் கோடிக்கணக்கானோர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

 தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது.தமிழகதில் அனைத்து துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது.குறிப்பாக உள்ளாட்சி துறையில் ஊழல் அதிகமாக உள்ளது.

 முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சனிப்பெயர்ச்சி காட்டிலும் சசி பெயர்ச்சியால் அதிகம் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தின் மக்கள் நலன் மற்றும் உரிமைகளை  காத்திட, வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக ஆக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

Next Story