ஆபாச படத்தில் நடிக்க வைக்கப்பட்ட மாடல் அழகி 9 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 Feb 2021 5:43 AM IST (Updated: 11 Feb 2021 5:48 AM IST)
t-max-icont-min-icon

தன்னை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக மாடல் அழகி ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். இது தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை

ஜார்க்கண்டில் நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்ற 29 வயது மாடல் அழகி ஒருவர் மும்பையில் படவாய்ப்பு தேடிவந்தார். அப்போது அவரை ஓ.டி.டி. இணைய தளத்தில் நடிக்க வைப்பதாக சிலர் நம்ப வைத்தனர். இதற்காக பின்னர் அவர் மிரட்டப்பட்டு ஆபாச படத்தில் நடிக்க வைக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக அந்த மாடல் அழகி மும்பை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

யாஷ்மின் கான் என்ற பெண் ஒருவர் ஓ.டி.டி. இணைய தளத்தில் நடிக்க தன்னிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டார். பின்னர் அவர் என்னை சக நடிகர்களுடன் ஆபாச காட்சிகளில் நடிக்குமாறு கட்டாயப்படுத்தினார். இதற்கு மறுத்த போது போலீசில் புகார் அளிப்பதாக என்னை மிரட்டினார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வைத்து என்னை ஆபாச காட்சியில் நடிக்க வைத்தனர். 
இந்த சம்பவத்தில் யாஷ்மின் கான் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாடல் அழகி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நடிக்க வாய்ப்பு தேடுபவர்களை ஆபாச படங்களில் நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியது தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  

சமீபத்தில் கூட இப்படியொரு சம்பவம் நிகழ இருந்ததை போலீசார் முறியடித்தனர். இந்தநிலையில் தன்னை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக மாடல் அழகி ஒருவர் போலீசில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story