மோட்டார் சைக்கிள் பறிப்பில் ஈடுபட்டவர் கைது
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து மோட்டார் சைக்கிள்களை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர், மாங்காடு போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து மோட்டார் சைக்கிளை பறித்து செல்லும் சம்பவம் அதிக அளவில் நடந்து வந்தது.
இதுகுறித்து மாங்காடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தார். இந்த நிலையில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அருண் (21) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போலீசார் கெடுபிடி அதிகம் இருக்காது என்பதால் லிப்ட் கேட்பது போல் நடித்து, லிப்ட் கொடுப்பவர்களின் பின்னால் அமர்ந்து சிறிது தூரம் சென்றவுடன் அவர்களை தாக்கி அவர்களது மோட்டார் சைக்கிளை பறித்து சென்று விடுவதாக தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story