புகார் அளிக்க சென்றவரை தாக்கியதாக குற்றச்சாட்டு: சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் உத்தரவு


புகார் அளிக்க சென்றவரை தாக்கியதாக குற்றச்சாட்டு: சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2021 10:51 AM IST (Updated: 11 Feb 2021 10:51 AM IST)
t-max-icont-min-icon

புகார் அளிக்க சென்றவரை தாக்கியதாக குற்றச்சாட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

சென்னை,

திருச்சி தென்னூரைச் சேர்ந்தவர் அமிருதீன். இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற என்னை, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பூட்ஸ் காலால் மிதித்து தாக்கினார். பின்னர், என் மீது வழக்குப்பதிவு செய்து விடுவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் காயம் அடைந்த நான், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். என்னை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 2 மாதத்துக்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

Next Story