9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், அரசு ஊழியர்கள் 10-வது நாளாக போராட்டம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு ஊழியர்கள் 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:-
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு ஊழியர்கள் 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 18 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் ஆதிசேஷையா கமிட்டியினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 2-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆர்ப்பாட்டம்
கடந்த 9 நாட்களாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று 10-வது நாளாக அரசு ஊழியர்களின் போராட்டம் நீடித்தது.
இதையொட்டி அரசு ஊழியர்கள் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில், கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பிரகாஷ், வேளாண்மைத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சுதாகர், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story