வங்கி மேலாளர் படுகாயம்
லாரியில் இருந்து தார்ப்பாய் விழுந்து வங்கி மேலாளர் படுகாயம் அடைந்தார்
ராமநாதபுரம், பிப்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள ரெட்டையூரணி இருட்டூரணி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (வயது44). இவர் ராமநாதபுரம் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு சென்று வரும் இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த லாரியின் மேல் போடப்பட்டு இருந்த தார்ப்பாய் தவறி மோட்டார் சைக்கிளில் சென்ற முனியசாமி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த முனியசாமி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளைவீடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (50) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story